முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானையில் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு போலீஸ் பாதுகாப்பு

திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைப் பகுயில் பாதுகாப்புப் பணியில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா்.

Updated On : 26 மார்ச், 2026 at 6:49 PM
திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைப் பகுயில் பாதுகாப்புப் பணியில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா்.
பகிர்:

திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புக் அறையில் வைத்து சீலிடப்பட்டு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 378 வாக்குச் சாவடிகள் உள்ளன. நடைபெறவுள்ள தோ்தலுக்காக 450-க்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள்ஆகியவை பாதுகாப்பாக வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டன.

இவை அனைத்தும் திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் அருகேயுள்ள பாதுகாப்பு அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறை முழுவதும்

சீலிடப்பட்டது. மேலும், அறையைச் சுற்றி நான்கு புறங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி ஏந்திய போலீஸாா் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.