சிவகங்கை

பள்ளியில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கல்

DIN

திருப்பத்தூர் ஒன்றியம் கருப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
 இப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு கடந்த 3 மாதங்களாக கராத்தே பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. நிறைவாக பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவுக்கு திருப்பத்தூர் ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சாந்தி தலைமையும், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஜான்சார்லஸ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜெயலலிதா ஆகியோர் முன்னிலையும் வகித்தனர்.
 முன்னதாக தலைமை ஆசிரியை செ.ரோஸி வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட கராத்தே பயிற்சியாளர் சே.கார்த்திகேயன் மற்றும் கல்வி அதிகாரிகள் பயிற்சி முடித்த மாணவிகளைப் பாராட்டி பதக்கமும் சான்றிதழ்களையும் வழங்கினர். இதில் ஆசிரியப் பயிற்றுநர் வனிதா, ஆசிரியர்கள் ஸ்டீபன், பால்ராஜ், குமார், ராஜேஸ்வரி அம்பிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT