சிவகங்கை

மனைவி தற்கொலை வழக்கு: கணவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை

DIN

மனைவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், கணவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 51 ஆயிரம் அபராதமும் விதித்து, சிவகங்கை மகளிர் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.
சிவகங்கை மாவட்டம், புதுப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் நாகராஜூக்கும், சிவகங்கை நவ்ரோஜித் தெருவைச் சேர்ந்த சேகர் மகள் கண்மணிராதா என்பவருக்கும், கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து,
கண்மணிராதா சிவகங்கை தனியார் கடையில் வேலை பார்த்து வந்தாராம். இதனைக் கண்டித்து, நாகராஜ் 16.7.2012 இல் கடைக்கு நேரில் சென்று தாக்கியுள்ளார். இதனால் மனமுடைந்த கண்மணிராதா தற்கொலை கொண்டார்.
இது குறித்து கண்மணிராதாவின் தந்தை சேகர் கொடுத்த புகாரின்பேரில், சிவகங்கை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து நாகராஜ், அவரது தந்தை பாண்டி, தாயார் இந்திரா ஆகிய மூவரையும் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு சிவகங்கை மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமை நீதிபதி ஜெயராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில், நாகராஜ் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 51 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேலும், நாகராஜின் தந்தை பாண்டி, தாயார் இந்திரா ஆகியோரை விடுதலை செய்தும், கண்மணிராதா குடும்பத்தினருக்கு ரூ. 25 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT