சிவகங்கை

ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டுப் போட்டிகள்: நேஷனல் அகாதெமி பள்ளி சாம்பியன்

DIN

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் நேஷனல் அகாதெமி மாண்டிஷோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இது தொடர்பாக அப்பள்ளி முதல்வர் ராஜமுத்து சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இப்போட்டியில் 14 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் மாணரர் ஏ.சந்தானபாரதி 100 மீ.ஓட்டத்தில் முதலிடம், குண்டு எறிதலில் 2 ஆவது இடம் பெற்றார். தொடர் ஓட்டத்தில் ஆர்.ராகுல் கார்த்திக், பி.சஞ்சய், ஜெ.முகம்மது பர்கான் ஆகியோர் முதலிடம் பெற்றனர். 17 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் மாணவர் கே.ஹரீஸ் 100 மீ. ஓட்டத்தில் 2 ஆவது இடமும், தொடர் ஓட்டத்தில் முதலிடமும் பெற்றுள்ளார். ஹெச்.லுக்குமனுல் ஹக்கீம் 400 மீ. ஓட்டத்தில் 2 ஆவது இடமும், தொடர் ஓட்டத்தில் முதலிடமும் பெற்றுள்ளார். கே.சஞ்சய்,பி.ரகிமுதின் தொடர் ஓட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளனர். மாணவர் கே.பிரஜோத் நீளம் தாண்டுதலில் 2 ஆவது இடமும், கே.பஷந்த் 800 மீ. ஓட்டத்தில் 2- ஆவது இடத்தையும் தக்க வைத்துள்ளனர். மாணவர் அபிமன்யூ மும்முறைத் தாண்டுதல் 2 ஆ வது இடம் பெற்றிருக்கிறார். 19 வயதுக்கு உட்பட்டோருக்ôகன பிரிவில் கே.சுபாஷ் வட்டு எறிதலும், குண்டு எறிதலிலும் 2 ஆவது இடம் பெற்றுள்ளார். 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாணவியர் பிரிவில் டி.சுவேதா 100மீ ஓட்டத்தில் 2 ஆவது இடமும், 200 மீ. ஓட்டத்தில் 3 வது இடமும் பெற்றார். மாணவி அல்ரபிதா வட்டு எறிதலில் 2 வது இடத்தையும், குண்டு எறிதலில் 3 வது இடத்தையும் தக்க வைத்துள்ளார். வெற்றி பெற்ற மாணவர்களையும்,பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் டாக்டர். செய்யதா அப்துல்லா உள்பட பள்ளி நிர்வாகிகள் பலரும் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT