சிவகங்கை

கிராம கூட்டமைப்பு செயல்பாடு: சிவகங்கை ஆட்சியர் ஆய்வு

DIN

காளையார்கோவில் ஒன்றியத்தில் கிராம அளவிலான கூட்டமைப்பு செயல்பாடு குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க.லதா வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
  சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்திற்குள்பட்ட பருத்திக் கண்மாய் ஊராட்சியில் செயல்பட்டு வரும் கிராம அளவிலான கூட்டமைப்பு குறித்தும், மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும், ஆண்டூரணி கிராமத்தில் வறுமை ஒழிப்பு சங்கத்தின் கீழ் வழங்கப்பட்ட ஆடுகளை பார்வையிட்டார். 
இவைதவிர, அந்த பகுதி கிராமப்புற மக்களிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டினை கைவிடுமாறும் அறுவுறுத்தினார்.  ஆய்வின் போது,மகளிர் திட்ட அலுவலர் இளங்கோ,உதவி திட்ட அலுவலர்கள் வீரபாகு, சுந்தரமூர்த்தி,விஜயசங்கரி,தங்கராசு,டென்னிஸ்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டி.என்.அன்புதுரை, ரஜினிதேவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT