சிவகங்கை

தேவகோட்டை வாரச்சந்தையில் மீன் கழிவுகளால் துர்நாற்றம்

DIN

தேவகோட்டை நகர வாரச் சந்தையில் கொட்டப்படும் மீன் கழிவுகளால் துர்நாற்றம் ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர்.
தேவகோட்டை நகரில் ஐந்து லட்சத்திற்கும் மேலான பொதுமக்கள் வசித்துவருகின்றனர். இங்கு வாரச்சந்தையில்  
ஞாயிற்றுக்கிழமை மட்டும் பத்தாயிரத்திற்கும் மேலான மக்கள் வந்து செல்வர். இந்த வாரச்சந்தையில் காய்கறி சந்தை ஒரு பகுதியிலும், மீன் சந்தை மற்றொரு பகுதியிலும் இயங்கி வருகிறது.  சந்தையில் விற்கப்படும் மீன்களை நறுக்கி சுத்தம் செய்ய தொழிலாளர்கள் அங்கேயே இருக்கின்றனர். இந்த மீன்களின் கழிவுகள் அங்கேயே கொட்டப்படுகிறது.  அந்தக் கழிவுகளை நகராட்சி மறுநாள் சுத்தம் செய்வதில்லை.
இதனால் அந்தபகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசி வருகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும்  நடவடிக்கை எடுக்கவில்லையாம். எனவே உடனடியாக மீன் கழிவுகளை அகற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT