சிவகங்கை

சிவகங்கை ஸ்ரீவிஷ்ணு துர்க்கை அம்மன் கோயில் ஆடிப் பூரத் திருவிழா

DIN

சிவகங்கை ஸ்ரீவிஷ்ணு துர்க்கை அம்மன் கோயில் ஆடிப் பூரத் திருவிழாவில் பக்தர்கள் புதன்கிழமை பால்க் குடம், பறவைக் காவடி எடுத்து வழிபட்டனர்.

      இத்திருவிழா கடந்த ஜூலை 17-இல் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதனையடுத்து, தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக,  ஆராதனைகள் நடைபெற்றன. அம்மன் விஷேச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.  இதில், முக்கிய நிகழ்வாக பால்க்குடம்,  பறவைக்காவடி எடுத்தல் புதன்கிழமை நடைபெற்றது.சிவகங்கையில் உள்ள காசி விசுவநாதர் சமேத விசாலாட்சி அம்மன் கோயிலில் இருந்து சிறப்பு வழிபாடு நடத்தி பக்தர்கள் பால்க் குடம், பறவைக் காவடியினை எடுத்து அரண்மனை வாசல், பேருந்து நிலையம்  உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அடைந்தனர். அதன்பிறகு அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறன.
 இதில் சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்படுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT