தொண்டியில் உள்ள ஸ்ரீ தேவி பூமாதேவி சமேத உந்திப் பூத்த பெருமாள் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில் திங்கள்கிழமை மாலை விக்னேஸ்வர பூஜை தொடங்கியது. யாக சாலை பூஜைகள் செவ்வாய்கிழமை தொடங்கின. புதன்கிழமை காலை ஆறாம் கால யாக பூஜைக்குப்பின் கலசங்களில் புனித நீர் எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. திருக்கோவில் கலசத்திற்கு திபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீதேவி பூமாதேவி சேமத பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.