சிவகங்கை

மூடப்பட்ட மதுக்கடை திறப்பு: பெண்கள் மீண்டும் போராட்டம்

காரைக்குடியில் போராட்டத்தால் மூடப்பட்ட மதுக்கடையை மீண்டும் திறந்ததால், புதன்கிழமை பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

காரைக்குடியில் போராட்டத்தால் மூடப்பட்ட மதுக்கடையை மீண்டும் திறந்ததால், புதன்கிழமை பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 காரைக்குடி கழனிவாசல்-ஓ. சிறுவயல் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையை மூடக்கோரி கடந்த 20 நாள்களுக்கு முன் பெண்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து கடை மூடப்பட்டது.  இந்நிலையில் மீண்டும் இந்தக் கடை திறந்திருந்ததை புதன்கிழமை அவ்வழியே வந்த பெண்கள் பார்த்து, கடை முன்பு திரண்டு பணியாளர்களோடு வாக்குவாதம் செய்தனர். தகவலறிந்ததும் குன்றக்குடி காவல் நிலையப் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அரசு மதுபானக்கடை பணியாளர்கள் கடையை அடைத்துவிட்டுச் சென்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT