முகப்பு
சிவகங்கை

கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியிலிருந்து கட்டுக்குடிப்பட்டி வழியாக பொன்னமராவதி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 18 மார்ச், 2017 at 11:27 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:45 PM

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியிலிருந்து கட்டுக்குடிப்பட்டி வழியாக பொன்னமராவதி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்கம்புணரியிலிருந்து காலை 9 மணிக்கு புறப்படும் இந்த அரசுப் பேருந்து, கட்டுக்குடிப்பட்டி, மேலவண்ணாரிருப்பு, எஸ்.புதூர், உலகம்பட்டி வழியாக பொன்னமராவதிக்குச் செல்கிறது. முன்னதாக, இப்பேருந்து காலை 6.30 மணிக்கு திருக்கோஷ்டியூரிலிருந்து புறப்பட்டு சிங்கம்புணரி வருகிறது.  
இந்த வழித்தடத்தில் ஒரேயொரு அரசுப் பேருந்து மட்டுமே இயக்கப்படுவதால், இப்பகுதியில் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் இந்தப் பேருந்து வேறு வழித்தடத்தில் மாற்றி இயக்கப்படும்போது, பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.  எனவே, இந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.