முகப்பு
சிவகங்கை

ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மானாமதுரையில் கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ சங்க ரயில்வே தொழிலாளர்கள் ரயில் நிலையம் முன்பு வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:15 AM
பகிர்:

மானாமதுரையில் கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ சங்க ரயில்வே தொழிலாளர்கள் ரயில் நிலையம் முன்பு வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அமைச்சரவை குழு பரிந்துரைப்படி ரயில்வே தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும், தொழிற்சங்கங்களின் உரிமைகளை பறிக்கக்கூடாது, தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கிளைத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார், செயலர் சங்கரதாஸ், கோட்ட உதவிச் செயலர் ராம்குமார், உதவித்தலைவர் இருளப்பன் உள்ளிட்டோர் கோரிக்கைளை விளக்கிப் பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.