சிவகங்கை

விவசாய மேம்பாட்டுத் திட்டத்தில் மானிய விலையில் விதைகள் விநியோகம்

DIN

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் வட்டாரத்தில் விவசாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மானிய விலையில் விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
 வேளாண்மை துறையில், நடப்பு ஆண்டில் நீடித்த நிலையான மானாவாரி விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் காரிப்பருவத்தில் உளுந்து 375 ஏக்கர் பரப்பிலும், ராபி பருவத்தில் நிலக்கடலை 175 ஹெக்டேர் பரப்பிலும், எள் 150 ஹெக்டேர் பரப்பிலும், உளுந்து 300 ஹெக்டேர் பரப்பிலும் பயிரிடப்பட உள்ளன.
 இத்திட்டத்தில் பங்குபெறும் விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் மானியத்தில் விதை நுண்ணூட்டம் மற்றும் நீர் உரங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. மேலும் உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.1,250 வீதம் மானியம் வழங்கப்படுகிறது. இது குறித்த விவரங்கள் அறிய எஸ்.புதூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என வேளாண் உதவி இயக்குநர் மதன்குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT