முகப்பு
சிவகங்கை

மாணவிக்கு செல்லிடப்பேசியில் தொல்லை: கண்டித்த தந்தைக்கு கத்திக்குத்து: சிவகங்கையில் பிளஸ் 2 மாணவர் கைது

சிவகங்கையில் வியாழக்கிழமை மாணவிக்கு செல்லிடப்பேசி மூலம்  தொல்லைகொடுத்ததைக்  கண்டித்த, மாணவியின் தந்தை உள்பட இருவர்

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

சிவகங்கையில் வியாழக்கிழமை மாணவிக்கு செல்லிடப்பேசி மூலம்  தொல்லைகொடுத்ததைக்  கண்டித்த, மாணவியின் தந்தை உள்பட இருவர் கத்தியால் குத்தப்பட்டனர். இது தொடர்பாக மாணவர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
     சிவகங்கை சீனிவாச நகரைச் சேர்ந்தவர் கருப்பையா(44). இவரது மகள் சிவகங்கையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரை, அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மானாமதுரையைச் சேர்ந்த பெரியசாமி மகன் முனீஸ்வரன் செல்லிடப்பேசி மூலம் அடிக்கடி தொந்தரவு செய்தராம்.  இந்நிலையில் புதன்கிழமை இரவு சிவகங்கை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அந்த மாணவரை மாணவியின் தந்தை கருப்பையா, அவரது மனைவி கண்ணாத்தாள், உறவினரான அருண்பாண்டியன் ஆகியோர் கண்டித்துள்ளனர். அதன்பின்னர், கண்ணாத்தாள் பேருந்தில் ஏறிச்சென்றுள்ளார். கருப்பையா, அருண்பாண்டியன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சிவகங்கை ரயில்வே பாலத்தில் சென்று கொண்டிருந்தனர்.   அப்போது அவர்களை மாணவர் முனீஸ்வரன் உள்பட 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கத்தியால் குத்தினாராம். இதில் பலத்த காயமடைந்த இருவரும்  சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை நகர் போலீஸார் முனீஸ்வரன் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில் முனீஸ்வரன் அவரது நண்பர்களான கேசவகுமார், ரிஷி ஸ்ரீநிவாஸ் ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →