திருப்புவனம் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்: வியாபாரிகளுக்கு அபராதம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் புதன்கிழமை கடைகளில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் புதன்கிழமை கடைகளில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனர்.
சிவகங்கை மண்டல உதவி பேரூராட்சிகள் துறை இயக்குநர் (பொறுப்பு) ராஜேந்திரன் தலைமையில் திருப்புவனத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் அழகர்சாமி மற்றும் பணியாளர்கள் அனைத்து வீதிகளிலும் உள்ள வியாபார நிறுவனங்கள் மற்றும் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது விற்பனைக்காகவும் பயன்பாட்டிற்காகவும் வைத்திருந்த தரமில்லாத பிளாஸ்டிக் பைகள், கப்புகளை பறிமுதல் செய்தனர். மேலும் இவற்றை வைத்திருந்த வியாபாரிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.