முகப்பு
யுபிஎஸ்சி

ஹோர்முஸ் நீரிணை... யுபிஎஸ்சி தேர்வர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை...

Updated On : 14 மார்ச், 2026 at 1:44 PM
பகிர்:

ஹோர்முஸ் நீரிணை

  • ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) உலகில் மிகவும் முக்கியமான கடல் வழித்தடம்

  • இது பாரசீக வளைகுடா (Persian Gulf) மற்றும் ஓமன் வளைகுடாவை (Gulf of Oman) இணைக்கும் நீரிணை

  • ஹோர்முஸ் நீரிணையின் அகலம் சுமார் 33 கிலோமீட்டர்

  • ஈரான் (வடக்கு) மற்றும் ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் (தெற்கு) இடையே அமைந்துள்ளது

  • உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் சுமார் 20-30 சதவிகிதம் இந்த வழியாக செல்கிறது

  • சௌதி அரேபியா, ஈராக், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இந்த நீரிணை வழியாக ஏற்றுமதி செய்கின்றன.

  • இந்த நீரிணை வழியாக இந்தியா சுமார் 40 சதவிகித கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான திரவ எரிவாயு இறக்குமதி செய்கிறது.

ஈரான்

தலைநகர் - டெஹ்ரான்

எல்லையை பகிர்ந்துகொள்ளும் நாடுகள்

  • Iraq, Turkey (West)

  • Armenia Azerbaijan (North-West)

  • Turkmenistan (North)

  • Afghanistan, Pakistan (East)

Gulf Cooperation Council (GCC)

Gulf Cooperation Council (GCC) என்பது பாரசீக வளைகுடா பகுதியில் உள்ள அரபு நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார கூட்டமைப்பு ஆகும்.

இந்த அமைப்பு பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் அரசியல் ஒத்துழைப்பை அதிகரிக்க உருவாக்கப்பட்டது.

தொடக்கம்: 1981

தலைமைச் செயலகம்: ரியாத், சௌதி அரேபியா.

GCC உறுப்பு நாடுகள்

சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், ஓமன், பஹ்ரைன்

முக்கிய நோக்கங்கள்

  • உறுப்பினர் நாடுகளுக்கு இடையே பொருளாதார ஒருங்கிணைப்பு

  • பாதுகாப்பு மற்றும் அரசியல் ஒத்துழைப்பு

  • வர்த்தகம் மற்றும் முதலீடு வளர்ச்சி

  • வளைகுடா பகுதியில் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு

இந்தியா - ஹோர்முஸ் நீரிணை முக்கியத்துவம்

எரிசக்தி பாதுகாப்பு: இந்தியா அதிக அளவில் எண்ணெய் மற்றும் LPG-ஐ GCC நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது.

வர்த்தக உறவு: GCC நாடுகள் இந்தியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளிகள்.

இந்தியர்கள் வாழ்வு: சுமார் 80–90 லட்சம் இந்தியர்கள் GCC நாடுகளில் வேலை செய்கிறார்கள்.

முக்கிய கடல் வழி: ஹோர்முஸ் நீரிணை அருகில் இருப்பதால் உலக எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியம்.

International Atomic Energy Agency (IAEA)

தொடக்கம் - 1957

தலைமையகம் - வியன்னா, ஆஸ்திரியா

தொடர்பு: ஐக்கிய நாடுகளுடன் இணைந்து செயல்படும் சர்வதேச அமைப்பு.

முக்கிய நோக்கம்: அணு ஆற்றலை அமைதியான பயன்பாட்டிற்கு ஊக்குவிப்பது மற்றும் அணு ஆயுதங்கள் உருவாக்கப்படாமல் தடுக்குவது.

முக்கிய பணிகள்

அணு நிலையங்களை ஆய்வு (Inspection) செய்தல்

அணு பொருட்களை கண்காணித்தல்

நாடுகளுக்கு தொழில்நுட்ப உதவி வழங்குதல்

உறுப்பு நாடுகள்

175+ நாடுகள் உறுப்பினர்கள்

இந்தியா - 1957-ல் சேர்ந்தது

summary

What competitive exam aspirants need to know regarding the Strait of Hormuz...

முழு கட்டுரையைப் படிக்க →