சிவகங்கை

சங்கிலி பறித்தவர்களை பிடிக்க முயன்ற இளைஞருக்கு வெட்டு

DIN

காரைக்குடியில் செவ்வாய்க்கிழமை  அடுத்தடுத்த இரண்டு இடங்களில் சங்கிலிப்பறிப்புச் சம்வங்கள் நடந்தன. இதில் ஒரு சம்பவத்தில் திருடர்களை பிடிக்க முயன்ற இளைஞரை கத்தியால் தாக்கிவிட்டு திருடர்கள் தப்பியோடினர்.
தேவகோட்டையைச் சேர்ந்த இந்திரா(51) சித்தமருத்துவராக அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார். இவர் காரைக்குடி மெ.மெ. வீதியில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்கள் இந்திரா கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பறித்தனர். அப்போது அவர் சங்கிலியை பிடித்துக் கொண்டதால் சங்கிலியின் ஒரு பகுதி மட்டும் திருடர்கள் கையில் சிக்கியது. அதனுடன் அவர்கள் தப்பியோடிவிட்டனர்.
மற்றொரு சம்பவம்: செஞ்சை ஒளவையார் தெருவைச் சேர்ந்தவர் பழனியாயி (65). இவர் அப்பகுதியில் நடந்து சென்றபோது அவர் அணிந்திருந்த சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்கள் பறித்துக் கொண்டு தப்பியுள்ளனர். பழனியாயி கூக்குரலிடவே அருகே நின்றிருந்த இளைஞர்கள் சதீஷ்,  ஹரி ஆகியோர் திருடர்களை விரட்டிச் சென்றனர்.
சந்தைப்பேட்டை அருகே திருடர்கள் மடக்கிப் பிடிக்க முயன்றனர். அப்போது திருடர்கள் வைத்திருந்த கத்தியால் சதீஷை தாக்கினர். இதில் அவருக்கு கையில் பலத்த வெட்டு விழுந்தது.  பின்னர் திருடர்கள் தப்பியோடிவிட்டனர்.
காயமடைந்த சதீஷை மீட்டு மானகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்நிலையில் செஞ்சை மாரியாயிடம் திருடர்கள் பறித்துச்சென்ற சங்கிலி பித்தளை என்பது போலீஸார் விசாரனையில் தெரியவந்தது.
அடுத்தடுத்து நடந்த இந்த 2 சங்கிலிப் பறிப்புச் சம்பவங்கள் குறித்து காரைக்குடி தெற்குக் காவல்நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT