சிவகங்கை

காரைக்குடியில் ரூ.36 ஆயிரம் பறிமுதல்

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் புதன்கிழமை சுமார் 6 மணி நேரத்திற்கும் மேல் சோதனை மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத ரூ.36 ஆயிரம் கைப்பற்றப்பட்டுள்ளது.
காரைக்குடி சுப்பிரமணியபுரம் 6-ஆவது வீதியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் புதன்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் பீட்டர், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சந்திரன் மற்றும் போலீஸார் சோதனையிடத் தொடங்கினர். இந்த சோதனை இரவு 7.30 மணி வரை தொடர்ந் தது.  இச்சோதனையின்போது அலுவலகத்தின் முகப்பு கதவு மூடப்பட்டது. அலுவலகத்தினர் யாரையும் வெளியில் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. இரவு சுமார் 7.30 மணிக்கு ஒப்பந்தப்பணியாளர்கள் மட்டும் வெளியே அனுப்பப்பட்டனர். இச்சோதனையின் போது கணக்கில் காட்டப்படாமல் ரூ. 36 ஆயிரம் இருந்ததால், அது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் அலுவலர்களிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT