சிவகங்கை

சிறுமி பலாத்காரம்: 3 பேர் கைது

DIN

சிவகங்கை அருகே சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த வழக்கில் மூவரை சிவகங்கை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
        சிவகங்கை அருகே உள்ள பேரணிப்பட்டியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த சில  நாட்களுக்கு முன்பு அவரது  வீட்டில் அவரது தாயுடன் இருந்த போது காரில் வந்த சில மர்ம  நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி சிறுமியை கடத்திச் சென்றனராம். பின்னர்,அவரை பலாத்காரம் செய்து மதகுபட்டியை அடுத்த கீழப்பூங்குடி பகுதியில் இறக்கிவிட்டு சென்று விட்டனராம். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கை மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வந்தனர். 
 இந்நிலையில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில், சிவகங்கை துணைக் காவல் கண்காணிப்பாளர் மங்களேஸ்வரன் மற்றும் திருமலைக்குமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரித்து வந்தனர்.
    விசாரணையில், சிவகங்கை அருகே மணக்குளம் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்ற பர்மா பாண்டி(30), அதே ஊரைச் சேர்ந்த அருண்பாண்டி(எ)செல்வம்(27), மதுரை உத்தங்குடி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன்(23), சென்னையைச் சேர்ந்த சுலைமான், மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த சிரஞ்சீவி (23) ஆகிய 5 பேரும் சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது.
      இதையடுத்து,இந்த வழக்கில் பாண்டி என்ற பர்மா பாண்டி, பிரபாகரன்,சிரஞ்சிவி ஆகிய மூவரையும் சிவகங்கை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்து,அவர்களிடமிருந்த கார்,20 பவுன் நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.மேலும் மற்ற இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
     கைது செய்யப்பட்டுள்ள பர்மா பாண்டியின் மீது சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.மேலும்,எட்டுமுறை  குண்டர் சட்டத்தில் கைதாகி விடுதலையானவர்.இளையான்குடி அருகே அண்மையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில்,துணை மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்த முருகேசன் (45) என்பவர் இறந்த வழக்கில் மேற்கண்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது குறிப்பிடதக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT