சிவகங்கை

மானாமதுரை, திருப்புவனம்  சிவதலங்களில்  சிவராத்திரி வழிபாடு

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனத்தில் உள்ள சிவ தலங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு  விடியவிடிய  மகா சிவராத்திரி வழிபாடு நடத்தப்பட்டது. 
மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயில், திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் மகாசிவ ராத்திரியை முன்னிட்டு முதல் கால பூஜை இரவு 9 மணிக்கு தொடங்கியது. 
அப்போது லிங்க விடிவிலான சிவலிங்கங்களுக்கு அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடத்தி அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடந்தன. இவ்வாறு விடிய விடிய குறிப்பிட்ட சில மணி நேர இடைவேளையில் அபிஷேக, ஆராதனைகள் நடத்தி வழிபாடு நடைபெற்றது. இப்பூஜைகளில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பெண்கள் விளக்கேற்றி வைத்து வழிபட்டனர். 
மேலும் மானாமதுரை ரயில் நிலையம் எதிரேயுள்ள பூர்ணசக்கர விநாயகர் கோயிலில் உள்ள ஸ்ரீ காசிவிஸ்வநாதர் சன்னதியிலும் சிவராத்திரி பூஜை வழிபாடு நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போடியில் பலத்த மழை

கம்பம் சித்திரைத் திருவிழாவில் திமுகவினா் நீா்மோா் விநியோகம்

சித்திரைத் திருவிழா: மலா் அங்கி அலங்காரத்தில் கெளமாரியம்மன்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க விழிப்புணா்வு பிரசாரம்

குறுகிய கால பயறு வகைகளை சாகுபடி செய்யலாம்

SCROLL FOR NEXT