முகப்பு
சிவகங்கை

அழகப்பா பல்கலை. ஆட்சி மன்றக் குழு புதிய உறுப்பினர் நியமனம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக, புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் க

Updated On : 15 மே, 2018 at 12:28 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக, புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஆர். சுவாமிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: வித்யாகிரி கல்லூரியின் முதல்வராகவும், கணிதவியல் துறைத் தலைவராகவும் உள்ள ஆர். சுவாமிநாதன், கணிதத் துறையில் நீண்டகால அனுபவம் பெற்றுள்ளார்.
இவர், பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கும், மேல்நிலைப் பள்ளிகளுக்குமான கணிதப் பாடப் புத்தகங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பல்வேறு நாடுகளுக்கும் கல்விப் பயணம் மேற்கொண்டு கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார்.
தமிழக ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக வேந்தர் பன்வாரிலால் புரோஹித், அழகப்பா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக சுவாமிநாதனை, கடந்த 3.5.2018 முதல் 3 ஆண்டுகளுக்கு நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, சுவாமிநாதன் அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சொ. சுப்பையாவை திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.