முகப்பு
சிவகங்கை

காரைக்குடியில் இடி, மின்னலுடன் மழை

காரைக்குடியில் திங்கள்கிழமை பிற்பகலில் இடி, மின்னலுடன் மழை பெய்ததால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

Updated On : 15 மே, 2018 at 12:27 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

காரைக்குடியில் திங்கள்கிழமை பிற்பகலில் இடி, மின்னலுடன் மழை பெய்ததால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.
கத்திரி வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. ஆனால், காரைக்குடியில் மட்டும் கருமேகம் திரண்டு வந்தபோதிலும், மழை பொழியவில்லை.
இந்நிலையில், திங்கள்கிழமை பகலில் வெயில் வாட்டியது. பின்னர், பிற்பகல் 3.30 மணி முதல் 3.50 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால், சாலையோரங்களில் தண்ணீர் தேங்கியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.