அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழா கொடியேற்றம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தென்திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடி அலர்மேல்மங்கை உடனுறை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தென்திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடி அலர்மேல்மங்கை உடனுறை திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழக இந்துசமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழுள்ள இக்கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழா 15 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா தொடக்கமாக திங்கள்கிழமை நண்பகலில் கொடியேற்றம் நடைபெற்றது. அதையொட்டி, சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
விழாவின், முதல் நாளில் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவியுடன் சுவாமி சிறப்புஅலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவில், அம்சவாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 29-ஆம் தேதி மாலையிலும், தெப்ப உற்சவம் ஜூன் 1- ஆம் தேதியும் நடைபெறுகிறது.
கொடியேற்ற நிகழ்ச்சியில், அறங்காவலர் குழுத் தலைவர் நா. சீனிவாசன் செட்டியார், கோயில் செயல் அலுவலர் து. பாலதண்டாயுதம் மற்றும் விழாக் குழுவினர், பக்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.