FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

குமாரராணி மீனா முத்தையா காலமானார்!

கல்வியாளர் குமார ராணி டாக்டர் மீனா முத்தையா (91) இன்று காலை காலமானார்.

குமார ராணி முத்தையா மீனா - கோப்புப் படம்
பகிர்:

கல்வியாளர் குமார ராணி டாக்டர் மீனா முத்தையா (91) இன்று காலை காலமானார்.

கல்வியாளர், கொடையாளர், தஞ்சாவூர் ஓவியத்தின் பாதுகாவலர் எனப் போற்றப்பட்ட குமார ராணி டாக்டர் மீனா முத்தையா, வயது முதிர்வு தொடர்பான நோய்களுக்கு ஊட்டியில் தனது வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலையில் காலமானார்.

மாநிலத்தின் கலாசாரம் மற்றும் கல்வித் துறைக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், அவரது இறுதிச் சடங்குகள் தமிழ்நாடு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இவரது இறுதி ஊர்வலம், செட்டிநாடு இல்லத்திலிருந்து நாளை (மே 3) காலை 9 மணிக்குப் புறப்பட்டு, மயிலாப்பூர் மயானத்தில் இறுதிச்சடங்குகள், அரசு மரியாதையுடன் நடைபெறும்.

குமார ராணி டாக்டர் மீனா முத்தையாவின் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments