FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

என் உதட்டுல நீ இனிக்கிறியே... அப்படிபோடு நடன விடியோவை பகிர்ந்த த்ரிஷா!

த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவு...

விஜய், த்ரிஷா - dinamani
பகிர்:

நடிகை த்ரிஷா அப்படிபோடு பாடலுக்கு நடனமாடிய விடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

நடிகை த்ரிஷா தேர்தலுக்கு முன் நடிகர் விஜய் உடன் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக விமர்சனங்களை எதிர்கொண்டார். சில நேரங்களில் இது தீவிரமாக விவாதிக்கப்பட்டாலும் ரசிகர்களில் பலர் விஜய் - த்ரிஷாவை வைத்து ரீல்ஸ்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

தற்போது, நடிகர் சூர்யாவுடன் கருப்பு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மே 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதில், ப்ரீத்தி என்கிற கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்துள்ளதாக கிளிம்ஸ் விடியோ வெளியிட்டு அறிவித்திருந்தனர்.

Advertisement

Advertisement

அதன் இறுதியில் நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் அறிமுக காட்சியில் பேருந்துக்குள் ஏறுவதற்கு முன் ’உள்ளே வருகிறேன்’ என்பதை சைகையில் சொல்வார். இந்த கிளிம்ஸில் த்ரிஷாவும் அப்படியே செய்கிறார்.

இந்த நிலையில், கில்லி திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘அப்படிபோடு’ பாடலுக்கு சில சிறுவர் - சிறுமியர் இணைந்து நடனமாடும் விடியோ இன்ஸ்டாகிரமில் கவனம் பெற்று வருகிறது. அதில், அதனைப் பகிர்ந்தவர், ‘எப்போதும் விஜய் - த்ரிஷாதான்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனைக் கண்ட த்ரிஷா, அந்த விடியோவை தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்ததுடன், உணர்வுப்பூர்வமாக இருப்பதைக் குறிப்பிடும் எமோஜியையும் வைத்துள்ளார். குழந்தைகள் நடனமாடும் அந்த விடியோ ரசிகர்களைக் கவர்ந்ததைவிட, த்ரிஷாவின் ஸ்டோரி பெரிதாக கவனிக்கப்பட்டு வருகிறது!

Actress Trisha shared a video of herself dancing to the song on Instagram.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments