சிவகங்கை

"வழக்குரைஞர்கள் புறக்கணிக்காமல் இருந்தால்  நீதிமன்றங்கள் நல்ல முறையில்  செயல்படும்'

DIN

வழக்குரைஞர்கள் புறக்கணிக்காமல் இருந்தால் நீதிமன்றங்கள் நல்ல முறையில் செயல்படும் என சிவகங்கை மாவட்ட தலைமை நீதிபதி பி. கார்த்திகேயன் தெரிவித்தார்.
திருப்புவனத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட தலைமை நீதிபதி கார்த்திகேயன் இவற்றை திறந்து வைத்து பேசியதாவது: வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு  செய்யாமல்  முன்னுதாரணமாக இருந்தால் நீதிமன்றங்கள் நல்ல முறையில் செயல்படும். 
வழக்குரைஞர்கள் சிறப்பாக செயல்பட்டால் நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்காமல் மக்களுக்கு விரைந்து நீதி கிடைக்கும். திருப்புவனத்தில் நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கை இப்போது நிறைவேறியுள்ளது. திருப்புவனம் வட்டத்தைச் சேர்ந்த பூவந்தி பகுதி வழக்குகள் சிவகங்கை  நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவதாகவும், பூவந்தி பகுதி வழக்குகளை திருப்புவனம் நீதிமன்றங்களில் விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வழக்குரைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இக் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். திருப்புவனத்தில் நீதிமன்றங்கள் அமைவதற்கு மாவட்ட ஆட்சியர் மிகவும் உறுதுணையாக இருந்தார். அனைவரின் முயற்சியால் இங்கு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டடுள்ளன என்றார். 
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோகித்நாதன், மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி செம்மல், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தமிழரசி, தலைமை குற்றவியல் நீதிமன்ற  நீதிபதி பாபுலால், மானாமதுரை, சிவகங்கை பகுதி வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT