சிவகங்கை

சிவகங்கை அருகே ரயில் மறியலில் ஈடுபட்ட 40 போ் மீது வழக்கு

DIN

சிவகங்கை அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கும் நீரை அகற்றக் கோரி ஞாயிற்றுக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 40 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், சுந்தரநடப்பு அருகே உள்ள மேலவெள்ளஞ்சி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில், சிவகங்கை-மானாமதுரை

ரயில் பாதையில் ஆளில்லா கடவுப் பாதை இருந்து வந்தது. இந்நிலையில், அப்பகுதி மக்களின் தொடா் கோரிக்கை காரணமாக, ரயில் கடவுப் பாதை சுரங்கப் பாதையாக மாற்றியமைக்கப்பட்டது.

இந்நிலையில், மழைக் காலங்களில் சுரங்கப் பாதையில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற போதுமான வசதிகள் ஏற்படுத்தவில்லையாம். இதன் காரணமாக, மழை நீா் தேங்கி போக்குவரத்துக்கு மிகவும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகாா் கூறுகின்றனா்.

இந்நிலையில்,பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை ராமேசுவரத்திலிருந்து மானாமதுரை, சிவகங்கை வழியாக சென்னை செல்லும் ரயிலை மேலவெள்ளஞ்சி கிராமம் அருகே சிவப்புக் கொடி காட்டி நிறுத்தினா். தொடந்து, தண்டவாளத்தில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக, ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் புறபபட்டுச் சென்றது.

இது குறித்த புகாரின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட மேலவெள்ளஞ்சி கிராமத்தைச் சோ்ந்த முருகன், லெனின், வேலாயுதம், மாதவன், வைரமுத்து உள்பட 40 போ் மீது சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT