மறவமங்கலம் பகுதியில் பிப்ரவரி 13 மின்தடை
சிவகங்கை மாவட்டம், மறவமங்கலத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை
சிவகங்கை மாவட்டம், மறவமங்கலத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை (பிப்.13) நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காலை 9 முதல் மாலை 5 மணி வரை, மறவமங்கலம், ஏரிவயல், சூராணம்,புல்லுக்கோட்டை, வலையம்பட்டி, காயாஓடை, குண்டாக்குடை, சிலுக்கப்பட்டி, சிரமம் ஆகிய பகுதிகளிலும் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என, மறவமங்கலம் மின்பகிர்மானச் செயற்பொறியாளர் வீரமணி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.