கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்! தேடும் பணி தீவிரம்!
கோடியக்கரை படகுத்துறையிலிருந்து கடலுக்குள் சென்று இன்று காலை வரை கரை திரும்பாத நான்கு மீனவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை படகுத்துறையிலிருந்து கடலுக்குள் சென்று இன்று (மே 26) காலை வரை கரை திரும்பாத 4 மீனவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.
கோடியக்கரை படகுத்துறையிலிருந்து பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான கண்ணாடியிழைப்படகு (பைபர்) ஒன்றில் மோடியக்கரையைச் சேர்ந்த அன்புச்செல்வன் உள்பட நான்கு மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் சென்றனர்.
இந்த நிலையில், திங்கள்கிழமை கரை திரும்பியிருக்க வேண்டிய மீனவர்கள் நால்வரும் இன்று (மே 26) காலை வரை கரைக்குத் திரும்பவில்லை.
Advertisement
Advertisement
கோடியக்கரை பகுதியில் திங்கள்கிழமை இரவு முதல் கடலில் பலத்த காற்று வீசி வந்தது. மீனவர்கள் கரை திரும்பாததை அடுத்து, சக மீனவர்கள் இரண்டு படகுகளில் சென்று தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் மாயமானது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Four fishermen who ventured into the sea from the Kodiakkarai fishing harbor—located near Vedaranyam in the Nagapattinam district—and have not returned to shore as of this morning (May 26) are currently being searched for.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.