முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூர் முருகன் கோயிலில் மண்ணை மலையாக்கும் திருவிழா

தைப்பூசத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் காளியம்மன் கோயில் அருகிலுள்ள முருகன்

Updated On : 23 ஜனவரி 2019, 8:19 am IST
பகிர்:

தைப்பூசத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் காளியம்மன் கோயில் அருகிலுள்ள முருகன் கோயிலில் மண்மலைத் திருவிழா  திங்கள்கிழமை நடைபெற்றது.
தைப்பூசத் திருவிழாவையொட்டி, இக்கோயிலில் ஆண்டுதோறும் மண்ணை மலையாக்கும் திருவிழா மற்றும் பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவில், திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு ஸ்ரீமுருகன் கோயிலில் இருந்து குளம்கரை கூத்த அய்யனார் கோயில் எதிரே உள்ள சேங்கையில் பிடிமண் எடுக்க பெண்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
பிடிமண் எடுத்து அய்யனார் கோயில் எதிரே நினைத்த காரியம் நடக்க வேண்டி பூஜை நடைபெற்றது. பின்னர், பெண்கள் பிடிமண் தட்டுகளுடன் நகரில் சிங்கம்புணரி ரோடு, அக்கினி பஜார், அச்சுக்கட்டு, பெரியபள்ளிவாசல், செட்டிய தெரு, காளியம்மன் கோயில் தெரு வழியாக முருகன் கோயிலை அடைந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த மண்மலை மைதானத்தில் மண் மலையாகக் குவிக்கப்பட்டு, தீபமேற்றி மலைக் கடவுள் முருகனை வழிபட்டனர். 
    அதைத் தொடர்ந்து, மூலவரான வள்ளி-தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவில் கலந்துகொண்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை. ஸ்ரீமுருகன் கோயில் கந்தசஷ்டி விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.