தங்கம் விலை இன்று(மே 26) குறைவு! இன்றைய நிலவரம்!
இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் தொடர்பாக...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,17,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச போர் பதற்றம், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
கடந்த மே 23-ஆம் தேதி சவரனுக்கு ரூ. 400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,840-க்கு விற்பனையானது. தொடர்ந்து திங்கள்கிழமை விலை கிராமுக்கு ரூ. 50 உயர்ந்து ரூ.14,780-க்கும், சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ. 1,18,240-க்கும் விற்பனையானது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மே 26) சவரனுக்கு ரூ. 400 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,17,840-க்கும் கிராமுக்கு ரூ. 50 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,730-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ. 295-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.95 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
In Chennai, the price of ornamental gold rose by Rs. 400 per sovereign on Tuesday and is being sold at Rs. 1,17,840.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.