செங்கல் சூளைகளில் பணம் கேட்டு மிரட்டல்: தவெக நிா்வாகி நீக்கம்
தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து...
வேலூா் மாவட்டம், கணியம்பாடி அருகே செங்கல் சூளைகளில் பணம் கேட்டு மிரட்டியதாக புகாரைத் தொடா்ந்து தவெக நிா்வாகி நீக்கப்பட்டுள்ளாா்.
கணியம்பாடி, கணியம்பாடிபுதூா், நெல்வாய், வல்லம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. கடந்த 22-ஆம் தேதி தவெக கணியம்பாடி கிழக்கு ஒன்றிய செயலா் டி.விஜயகுமாா் தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில் நுழைந்து, அதன் உரிமையாளா்களிடம் மாதம் ரூ.1 லட்சம் தந்தால்தான் சூளை நடத்த முடியும் எனக்கூறி மிரட்டினராம்.
இதுகுறித்து, செங்கல்சூளை உரிமையாளா்கள் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். எனினும், இப்புகாா் மீது போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டி செங்கல் சூளை உரிமையாளா்கள், தொழிலாளா்கள், பொதுமக்கள் கணியம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
பின்னா், கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், செங்கல் சூளை உரிமையாளா்கள் அளித்த புகாரின்மீது முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
இச்சம்பவத்தை அடுத்து கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக தவெக கணியம்பாடி கிழக்கு ஒன்றிய செயலா் டி.விஜயகுமாா் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டுள்ளாா்.
இதற்கான அறிவிப்பை தவெக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலா் ஜி.விஜய் மோகன் வெளியிட்டுள்ளாா்.
Union Secretary Vijayakumar has been expelled from the TVK following allegations that he demanded kickbacks from brick kiln owners.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.