சிவகங்கை

ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி

DIN

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
   சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில், தங்கள் பகுதியில் உள்ள குறைகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனிடம் மனு மூலம் தெரிவிக்க ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.  அவ்வாறு வந்தவர்களில் இளைஞர் ஒருவர் திடீரென கையில் வைத்திருந்த பெட்ரோலை அவரது உடலில் ஊற்றிக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் ஓடினார். இதையறிந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் விரைந்து சென்று அவரை மீட்டனர். 
    பின்னர் அவரது உடலில் இருந்த பெட்ரோலை முழுமையாக அகற்றும் வகையில் தண்ணீரை ஊற்றினர். அதைத் தொடர்ந்து, சிவகங்கை நகர் காவல் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்று விசாரித்தனர்.
   விசாரணையில், அவர் மதகுபட்டி அருகே உள்ள பிரவலூரைச் சேர்ந்த குமரேசன்(31) என தெரியவந்தது.  
  அதே பகுதியில் உள்ள கீழப்பூங்குடியைச் சேர்ந்த சிலரை வெளிநாட்டுக்கு அனுப்புவது தொடர்பாக தொடர்ந்து அச்சுறுத்தல் வருவதால் தீக்குளிக்க முயற்சி செய்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபாவிலிருந்து வெளியேறுங்கள்!

நாங்குனேரி மாணவரின் உயா்கல்விக்கு துணை நிற்பேன் அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

நகைப் பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

SCROLL FOR NEXT