சிவகங்கை

"அனுமதியின்றி செயல்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'

DIN

சிவகங்கை மாவட்டத்தில் அரசின் அனுமதியின்றி செயல்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் அரசின் அனுமதியின்றி குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருவதாக புகார் வந்தது. அதையடுத்து, சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் வே.ஜெயராமபாண்டியன் தலைமையிலான அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் காஞ்சிரங்கால் ஊராட்சிக்குள்பட்ட காமராஜர் காலனியில் அரசு அனுமதி மற்றும் அங்கீகாரம் இன்றி குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனம் செயல்படுவது தெரியவந்தது. இந்நிலையில், அந்நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டதுடன், சீல் வைத்து மூடப்பட்டது. 
இதுபோன்று மாவட்டம் முழுவதும் கள ஆய்வு மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே சட்டத்துக்கு புறம்பான முறையில் செயல்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனம் மற்றும் உணவு தொடர்பான நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இதுதொடர்பாக பொதுமக்கள் 94440 42322 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

SCROLL FOR NEXT