சிவகங்கை

தேவகோட்டையில் ஆரம்பப் பள்ளி ஆசியர் கூட்டணி செயற்குழு கூட்டம்

DIN

தேவகோட்டை யில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயற்குழு  கூட்டம்  புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதற்கு அதன் வட்டாரத் தலைவர் ஆர். ஜோசப் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மு.க.புரட்சித்தம்பி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், தேவகோட்டை ஒன்றியத்திற்குள்பட்ட பள்ளிகள் அனைத்தும் கிராமப் புறங்களில் அமைந்திருக்கிறது. ஆசிரியர், மாணவர் 
வருகையை ஆன்லைனில் பதிவு செய்யும் போது சர்வரில் கோளாறு ஏற்படுகிறது. மேலும் கிராமப்புறங்களில் அனைத்து செல்லிடப்பேசி சேவை நிறுவளங்களுக்கும் சிக்னல் கிடைப்பதில்லை.  எனவே, தமிழக  அரசு நவீன செல்லிடப்பேசி வழங்குவதோடு,  போதிய இணையதள வசதி செய்து தரவேண்டும் என தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT