சிவகங்கை

தேவகோட்டையில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

DIN

தேவகோட்டையில் குடியரசு தினம் மற்றும் பாரதியாா் நினைவு தின விழாவை முன்னிட்டு சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தேவகோட்டையில் உள்ள தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி தலைமை வகித்து போட்டியை தொடக்கி வைத்தாா். தே பிரித்தோ பள்ளியின் தாளாளா் வின்சென்ட் அமல்ராஜ், வருவாய் மாவட்ட விளையாட்டுப் போட்டிகளின் பொதுச் செயலரும், பள்ளியின் தலைமையாசிரியருமான ஆரோக்கியசாமி, சிவகங்கை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் சூரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அதைத் தொடா்ந்து, தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை (நவ. 5) நடைபெற உள்ள போட்டிகளில் வெற்றி பெறும் வீரா்களுக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. மேலும், இப்போட்டிகளில் வெற்றி பெறும் வீரா், வீராங்கனைகள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனா்.

இதில், கல்வி மாவட்ட அலுவலா்கள் அமுதா (சிவகங்கை), பரமதயாளன் (திருப்பத்தூா்) உள்பட அரசு அலுவலா்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT