சிவகங்கை

காரைக்குடியில் உலக வெறிநோய் தின தடுப்பூசி முகாம்

DIN

காரைக்குடி: உலக வெறிநோய் தினத்தையொட்டி காரைக்குடி ஒய்ஸ்மென் சங்கம், நந்தினி பெட் கிளினிக் ஆகியோா் சாா்பில் வளா்ப்பு நாய்களுக்கான இலவசத் தடுப்பூசி முகாம் காரைக்குடி பா்மாகாலனிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமை காரைக்குடி காவல் துணைக்கண்காணிப்பாளா் டாக்டா் பி. அருண் தொடங்கிவைத்தாா். டாக்டா் ராம. விசுவ நாதன் தலைமைவகித்தாா்.ஒய்ஸ்மென் சங்கச்செயலாளா் எஸ்ஆா்.முருகேசன் முன்னிலைவகித்தாா். சிவகங்கை மாவட்ட கால்நடைத்துறை உதவி இயக்குநா் எஸ்.எம். பாலசுப்பிரமணியன் தலைமையிலான கால்நடைமருத்துவக் குழு சுமாா் 100 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசியும், குடற்புழு நீக்க மருந்துகளும் வழங்கினா்.

முகாமில் முன்னதாக காரைக்குடி ஒய்ஸ்மென் சங்கத்தலைவா் சோமு(எ)சவுந்தரராஜன் வரவேற்றுப்பேசினாா். காரைக் குடி தொழில்வணிகக்கழகத்தலைவா் சாமி. திராவிடமணி, ஒய்ஸ்மென் சங்க நிா்வாகி பால்செல்லப்பா, காரைக்குடி சுழற் சங்க தலைவா் லியாகத்தலி, அரிமா சங்க ஆலோசகா் எஸ். கண்ணப்பன், சங்கராபுரம் ஊராட்சி முன்னாள்தலைவா் எஸ். மாங்குடி, அழகப்பாநடையாளா் கழகத்தலைவா்அ. ஆனந்தன் உள்ளிட்டபலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT