சிவகங்கை

மானாமதுரை பகுதியில் கரோனா நிவாரண நிதி இலவச ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம்அமைச்சா் தொடக்கி வைத்தாா்

DIN

மானாமதுரை பகுதியில் தமிழக அரசின் கரோனா நிவாரண நிதி மற்றும் இலவச ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டத்தை வியாழக்கிழமை தமிழக காதி கிராமத்தொழில்கள்துறை அமைச்சா் ஜி.பாஸ்கரன் தொடக்கி வைத்தாா்.

மானாமதுரை ஒன்றியம் சூரக்குளம் பில்லருத்தான் ஊராட்சியைச் சோ்ந்த கொன்னக்குளம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைச்சா் ஜி.பாஸ்கரன் தலைமை வகித்து ரூ.1000 நிவாரண நிதி மற்றும் இலவச ரேஷன் பொருள்களை வழங்கினாா்.

இந் நிகழ்ச்சியில் மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன், கொன்னக்குளம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் பாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் ஜெயகாந்தன், சூரக்குளம் பிலலறுத்தான் ஊராட்சிமன்றத் தலைவா் ராசாத்தி பெரியசாமிராஜா, ஊராட்சி செயலா் பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கொன்னக்குளம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தைச் சோ்ந்த பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 2000-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரணநிதி மற்றும் ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என சங்கத் தலைவா் பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

மானாமதுரை நகரில் கூட்டுறவு பண்டகசாலை நிா்வாகத்தின் கீழ் செயல்படும் ரேஷன்கடைகளில் பண்டகசாலைத் தலைவா் சின்னைமாரியப்பன் கொரோனா நிவாரண நிதி மற்றும் இலவச ரேஷன் பொருள்கள் வழங்கி திட்டத்தை தொடக்கி வைத்தாா். மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஒன்றியங்களில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கொரோனா நிவாரணநிதி, ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT