இளையான்குடி, திருப்புவனம் பகுதிகளில் திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
இளையான்குடியில் திமுகவினர் தமிழகத்தின் முன்னாள் முதல்வரான கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
இளையான்குடியில் திமுகவினர் தமிழகத்தின் முன்னாள் முதல்வரான கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, திருப்புவனம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை திமுக தலைவர் கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அக்கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
இளையான்குடி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஏராளமான கிராமங்களில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திமுக தொண்டரணி, விவசாய அணி சார்பில் தாயமங்கலம், முனைவென்றி ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு அவர்களுக்கு அரசி, பருப்பு, முகக்கவசங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பெரும்பச்சேரி, இளமனூர் ஊராட்சிகளில் திமுக நெசவாளர் அணி, மாணவரணி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள், முகக்கவசங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக இந்த கிராமங்களில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிகளில் திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் சுப.மதியரசன், அவைத் தலைவர் பெரியசாமி, நகர்ச் செயலாளர் நஜூமுதீன், தொண்டரணி புலிக்குட்டி,ஊராட்சி செயலாளர் சத்தியேந்திரன், மாணவரணி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்புவனத்தில் மேற்கு ஒன்றிய திமுகவினர் கருணாநிதி உருவப்படத்துக்கு மாலைகள் அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர். அதன்பின் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் சேங்கை மாறன் தூய்மைப் பணியாளர்களுக்கு மரியாதை செய்து அவர்களுக்கும் பெண்களுக்கும் சேலைகள், முகக்கவசங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் வசந்தி சேங்கைமாறன் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் நாகூர்கன் முன்னிலை வகித்தார், திருப்புவனம் ஒன்றியத்தைச் சேர்ந்த பூவந்தி, பாட்டம், காஞ்சிரங்குளம், மேலராங்கியன் இந்திராநகர் உள்ளிட்ட கிராமங்களில் திமுக சார்பு அணிகள் சார்பில் பொதுமக்கள், மாணவர்கள், தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், மீனவரணி துணை அமைப்பாளர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் மகேந்திரன், தேவதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.