முகப்பு
சிவகங்கை

திருச்சி - ராமேசுவரம் - காரைக்குடி வழியில் அதிவிரைவு ரயில் தண்டவாள சோதனை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வழியாக திருச்சியிலிருந்து ராமேசுவரத்திற்கான தண்டவாள சோதனையில் அதிவிரைவு ரயில் காரைக்குடி ரயில் நிலையத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து சென்றது.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
காரைக்குடி ரயில்நிலையம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வழியாக திருச்சியிலிருந்து ராமேசுவரத்திற்கான தண்டவாள சோதனையில் அதிவிரைவு ரயில் காரைக்குடி ரயில் நிலையத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து சென்றது.  

புதன்கிழமை நடந்த இந்த ஆய்வானது தண்டவாளத்தின் உறுதித் தன்மை குறித்து ரயில்வே தொழில் நுட்ப பொறியியல் துறையினர் மேற்கொண்டனர்.கரோனா தீ நுண்மி தொற்றுப் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 23 முதல் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதில் ரயில் போக்குவரத்தும் ஒன்று என்பதால் தண்டவாளப் பாதைகளை ரயில்வே துறையினர் ஆய்வு செய்து சரி செய்தனர்.

மேலும் திருச்சியிலிருந்து ராமேசுவரம் வரை மின் பாதையாக ரயில் பாதையை மாற்றும் பணி தொடங்கவுள்ளது. இதற்கு ரயில் வேகம் மணிக்கு 110 கிலோ மீட்டர் அளவு இருப்பதை, மின் பாதை மாற்றும் தொழில் துட்பத்துறையினருக்கு அளிக்க  ரயில்வே தொழில் நுட்ப அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதற்காக திருச்சியிலிருந்து காலையில் 2 ரயில் பெட்டிகளுடன் புறப்பட்ட இந்த சோதனை ரயிலானது காரைக்குடியை 10.45 மணிக்கு கடந்து சென்றது. ஒரு பெட்டியில் ஆய்வுக் கருவியும், மற்றொரு பெட்டியில் அதிகாரிகளும் பயணித்தனர். திருச்சியிலிருந்து புதுக்கோட்டை , காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக ராமேசுவரத்திற்கு 4 மணி நேர பயணமாக மாற்றவே இந்த அதிவேக ரயில் ஆய்வு என்று ரயில்வே துறை தொழில் நுட்ப வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →