குஜராத் சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்!
குஜராத் சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவித்தது தொடர்பாக...
குஜராத் சட்டப்பேரவைக்கு மின்னஞ்சல் மூலமாக இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது.
சட்டப்பேரவை வழக்கமாக காலை 9 மணிக்குத் தொடங்கும். சரியாக அவை தொடங்குவதற்கு முன்பு, காலை 8.45 மணியளவில் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவையிலிருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
Advertisement
Advertisement
பின்னர், காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சட்டப்பேரவை முழுவதும் தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தினர்.
இதுகுறித்து காவல் துணை கண்காணிப்பாளர் பியூஷ் வன்டா கூறுகையில், “இதுவரை சந்தேகத்திற்குரிய பொருள்கள் ஏதும் கண்டறியப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், சில ஆண்டுகளாகவே நாட்டின் முக்கிய இடங்களுக்கு இதுமாதிரியான போலி வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
A bomb threat was released today via email to the Gujarat Legislative Assembly.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.