முகப்பு
சிவகங்கை

காரைக்குடியில் ஏஐடியுசி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்                  

காரைக்குடி பெரு நகராட்சி துப்புரவுத் தொழிலாளர் ஏஐடியுசி சங்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
காரைக்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி சங்கத்தினர்.
பகிர்:

காரைக்குடி பெரு நகராட்சி துப்புரவுத் தொழிலாளர் ஏஐடியுசி சங்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்கம் நடத்திய மாநிலந்தழுவிய ஆர்ப்பாட்டம் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலும் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கரோனா எதிர்ப்பு முன் களப்பணியாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு அரசு அறிவித்த சிறப்பு ஊதியத்தை வழங்க வேண்டும்,

ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 21,000 வழங்க வேண்டும், ரூ. 50 லட்சம் காப்பீடு வழங்க வேண்டும், மாதா மாதம் மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும், வேலை செய்ய உபகரணங்கள், முகக் கவசம், கையுறை போன்றவை வழங்க வேண்டும், பிஎப் வட்டி வழங்கவும், கணக்குகளை முறைப்படுத்தவும், காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்யவும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு துப்புரவுத் தொழிலாளர் ஏஐடியுசி தொழிற்சங்க மாநில உதவிச் செயலாளர் பிஎல். ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

சங்க நிர்வாகிகள் முருகன், ராமராஜ், கண்ணன், ராஜா, சண்முகசுந்தரம், லெட்சுமணன், ஆதி, உமையாள், முத்துமாரி உள்ளிட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →