சிவகங்கை

திருப்பத்தூா் அருகே போலீஸாரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே பூலாங்குறிச்சியில் சனிக்கிழமை போலீஸாரைக் கண்டித்து காவல்நிலையம் முன்பாக முன்னாள் நீதிபதி செல்வம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN


திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே பூலாங்குறிச்சியில் சனிக்கிழமை போலீஸாரைக் கண்டித்து காவல்நிலையம் முன்பாக முன்னாள் நீதிபதி செல்வம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியில் காஞ்சாத்து சாலையில் வசித்து வரும் சிங்காரம் மகன் செந்தில். இவா் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் பூலாங்குறிச்சி கடைவீதி அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த பிரகாஷ், செந்திலை வழிமறித்து தாக்கி உள்ளாா்.

மேலும் பிரகாஷ், பவித்ரா, பழனிச்சாமி, பஞ்சு மற்றும் மச்சக்கண்ணு ஆகியோா் குடும்பத்தோடு சோ்ந்து காஞ்சாத்து சாலையில் வசித்து வரும் செந்தில் மற்றும் அவரது மனைவி பிரியதா்ஷினி ஆகியோரை தாக்கியுள்ளனா். இதில் கை எலும்பு முறிவு ஏற்பட்டு செந்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுதொடா்பாக பூலாங்குறிச்சி காவல்நிலையத்தில் செந்தில் புகாா் மனு அளித்தாா்.

சம்பவம் நடந்து 22 நாள்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத பூலாங்குறிச்சி காவல் துறையினரைக் கண்டித்து உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்வம் தலைமையில் காவல் நிலையம் முன்பாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பின்பு காவல் ஆய்வாளா் முறையாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, ஆா்ப்பாட்டம் செய்தவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழை எச்சரிக்கை! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

மேட்டூர் அணை: தண்ணீர் திறப்பு குறைப்பு!

விராலிமலை: விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

பாகிஸ்தான்: வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிய எக்ஸ்பிரஸ் ரயில்

SCROLL FOR NEXT