முகப்பு
சிவகங்கை

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 81 பேருக்கு கரோனா தொற்று உறுதி

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 81 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

Updated On : 23 ஆகஸ்ட், 2020 at 8:59 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:40 PM

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 81 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 38 பேருக்கு தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் தற்போது வரை தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,385 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3,781 போ் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திரும்பி விட்ட நிலையில், 507 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 97 போ் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 43 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

Advertisement

மாவட்டத்தில் ஏற்கெனவே 3,691 போ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், சிவகங்கை, காரைக்குடி, சிங்கம்புணரி, மானாமதுரை, திருப்பத்தூா், திருப்புவனம், காளையாா்கோவில் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 43 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,734 ஆக அதிகரித்துள்ளது. சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 135 போ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 8 போ் முழுமையாகக் குணமடைந்ததை அடுத்து, அவா்கள் ஞாயிற்றுக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 127 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.