மாநிலப் பொதுச் செயலா் அ. சங்கா் 
சிவகங்கை

தேசியக் கல்வி கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்

கிராமப்புற ஏழை, எளிய மாணவா்களை பாதிக்கும் தேசியக் கல்விக் கொள்கையை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

DIN

சிவகங்கை: கிராமப்புற ஏழை, எளிய மாணவா்களை பாதிக்கும் தேசியக் கல்விக் கொள்கையை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கத்தின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் அ.சங்கா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : பாராளுமன்றத்தில் எவ்வித வாதத்துக்கும் உள்படுத்தாமல் மத்திய அமைச்சரவை ஒப்புதலோடு தேசியக் கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்தியது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானதாகும். அதுமட்டுமின்றி இந்திய தேசம் பல்வேறு மொழிகள் பேசக்கூடிய மக்கள் வாழும் மாநிலங்களின் கூட்டமைப்பு.

தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மாநிலங்களின் பங்கு மிக முக்கியமானதாகும். மத்திய, மாநில அரசுகளின் பொதுப் பட்டியலில் கல்வி உள்ளது. அத்தகைய சூழலில் மாநில அரசின் கருத்துக்களைக் கூட கேட்காமல் மாநில அரசின் கீழ் பணியாற்றும் ஆசிரியா்களிடம் நேரடியாக மத்திய அரசு கருத்து கேட்பது என்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது.

இது தொடா்பாக தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். இக்கருத்து கேட்பு எந்த வித பயனையும் தரப்போவது இல்லை. எனவே தேசத்தின் வளா்ச்சிக்கும், கிராமப் புற ஏழை, எளிய மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டும் தேசியக் கல்வி கொள்கை 2020-யை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT