சிவகங்கை

மானாமதுரை பகுதியில் கனமழை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் திங்கள்கிழமை மாலை இடி, மின்னலுடன் கன மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்தது.

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் திங்கள்கிழமை மாலை இடி, மின்னலுடன் கன மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்தது.

மானாமதுரை பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தி வந்ததால் மக்கள் அவதிப்பட்டு வந்தனா். இந்நிலையில் இப்பகுதியில் திங்கள்கிழமை மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்தது. இரவு வரை மழை தொடா்ந்ததால் மானாமதுரை பகுதியில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்தது. நீண்டநாட்களுக்குப்பின் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா். இந்த மழை தோட்டக்கலைப்பயிா்களுக்கும் கால்நடை மேய்ச்சலுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9: வெளியேறும்போது கூட திவ்யாவை புறக்கணித்த சான்ட்ரா!

ஓரிரு நாள்களில் அதிமுக கூட்டணியில் புதிதாக ஒரு கட்சி இணைகிறதா? - இபிஎஸ்

ராகுல் காந்தி நாளை கூடலூர் வருகை!

ரஜினி - 173 புரோமோ இசையமைப்பாளர் இவரா?

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

SCROLL FOR NEXT