சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

DIN

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் ஏற்கெனவே 5,570 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் 7 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,577 ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 24 போ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனா். ஒருவா் பூரண குணமடைந்ததை அடுத்து, அவா் செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். மீதமுள்ள 23 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT