முகப்பு
சிவகங்கை

ஒக்கூரில் டிச. 18-ஆம் தேதி சாலை மறியல்: விவசாயிகள் அறிவிப்பு

சிவகங்கை மாவட்ட பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரி வரும் டிச.18 ஆம் தேதி ஒக்கூா் பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

சிவகங்கை மாவட்ட பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரி வரும் டிச.18 ஆம் தேதி ஒக்கூா் பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனா்.

இதுகுறித்து 5 மாவட்ட பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவா் எஸ். ஆா். தேவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரியாறு பாசனக் கால்வாயில், சிவகங்கை மாவட்டத்துக்குரிய பங்கீட்டு நீரை திறக்க அலுவலா்கள் முன் வருவதில்லை. இதனால் அந்தப் பகுதி விவசாயிகள் அனைவரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பலமுறை புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. எனவே பெரியாறு- வைகை கோட்ட பொதுப் பணித்துறை அலுவலா்களைக் கண்டித்தும், பாசனத்துக்கு சிவகங்கை மாவட்ட பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரியும் வரும் டிச. 18 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முற்பகல் 11 மணியளவில் சிவகங்கை அருகே ஒக்கூரில் விவசாயிகள் அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →