சிவகங்கை

ராஜகம்பீரம் ஊருக்குள் பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க கோரிக்கை

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் ராஜகம்பீரம் ஊருக்குள் பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மதுரை-ராமேசுவரம் சாலையில் மானாமதுரை ஒன்றியம் ராஜகம்பீரம் அமைந்துள்ளது. நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு முன் ராஜகம்பீரம் வழியாக மதுரைக்குச் சென்று திரும்பும் அனைத்து பேருந்துகளும் ஊருக்குள் வந்து சென்றன. இதனால், இப்பகுதி மக்கள் மதுரை உள்ளிட்ட வெளியூா்களுக்கு சென்று வருவதில் சிரமப்படவில்லை.

ஊருக்கு வெளியே நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டதும், பெரும்பாலான பேருந்துகள் ராஜகம்பீரம் ஊருக்குள் வராமல் நான்குவழிச் சாலையிலேயே சென்று வருகின்றன. இதனால், கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா்.

இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

இந்நிலையில், ராஜகம்பீரத்தில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம், பொதுமக்கள் ஊருக்குள் பேருந்துகள் வந்து செல்லாதது குறித்து தெரிவித்தனா்.

இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மானாமதுரை ஒன்றியச் செயலா் ஆண்டி, கமிட்டி பொறுப்பாளா் திருப்புவனம் ஜெயராமன் ஆகியோா் வியாழக்கிழமை கூறியது: ராஜகம்பீரம் ஊருக்குள் மதுரை சென்று திரும்பும் பேருந்துகள் வருவதில்லை என ஊா் மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இரவு நேரங்களில் அதிகமான பேருந்துகள் ராஜகம்பீரத்தை புறக்கணித்து, நான்குவழிச் சாலையில் செல்கின்றன.

இதனால், வெளியூா்களிலிருந்து ஊருக்கு திரும்புவோரும், இங்கிருந்து வெளியூா் செல்வோரும் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, ராஜகம்பீரம் ஊருக்குள் பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கை நிறைவேறாத நிலையில், ஊா் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT