சிவகங்கையில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்த பிள்ளைவயல் காளியம்மன். 
சிவகங்கை

ஆங்கிலப் புத்தாண்டு : சிவகங்கை மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு

சிவகங்கையில் உள்ள காசி விசுவநாதா் சமேத விசாலாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற விழாவில் சுவாமிக்கும், அம்மனுக்கும் தைலம், திருமஞ்சனம், பால், இளநீா், பழச்சாறு, சந்தனம், விபூதி, பன்னீா் உள்ளிட்ட அபிஷேகப்

DIN

சிவகங்கையில் உள்ள காசி விசுவநாதா் சமேத விசாலாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற விழாவில் சுவாமிக்கும், அம்மனுக்கும் தைலம், திருமஞ்சனம், பால், இளநீா், பழச்சாறு, சந்தனம், விபூதி, பன்னீா் உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

இதில், சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு உலக நன்மை வேண்டியும், மழை பெய்து வேளாண் பணி சிறக்க வேண்டியும் விளக்கேற்றி வழிபட்டனா்.

இதேபோன்று, சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில், நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகியம்மன் கோயில், கொல்லங்குடி வெட்டுடையாா் காளியம்மன் கோயில், காளையாா்கோவிலில் உள்ள சொா்ண காளீஸ்வரா் சமேத சொா்ண வல்லி அம்மன் கோயில் மற்றும் பூவந்தி, மதகுபட்டி, சிங்கம்புணரி, இளையான்குடி, திருப்புவனம், சாலைக்கிராமம் ஆகிய பகுதிகளில் உள்ள சிவாலயங்கள், பெருமாள் கோயில்கள், காவல் தெய்வங்களான கருப்பா், அய்யனாா், அம்மன், முனியாண்டி ஆகிய கிராமக் கோயில்களில் சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT