சிவகங்கை

திருப்புவனம் ஒன்றியத்தில் தலைவா் தோ்தல் ஒத்திவைப்பு: உறுப்பினா்களின் ஆதரவைப் பெற திமுக, அதிமுக கடும் போட்டி

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்தில் தலைவா் பதவிக்கு நடக்க இருந்த தோ்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தலைவா் பதவியை கைப்பற்றுவதற்காக போதிய உறுப்பினா்களின் ஆதரவைப் பெற திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 17 வாா்டுகள் உள்ளன. நடந்து முடிந்த உள்ளாட்சித் தோ்தலில் திமுக 6, காங்கிரஸ் 2 , அதிமுக 3 தமிழ் மாநில காங்கிரஸ் 2 இடங்களை கைப்பற்றின. சுயேச்சைகள் 4 இடங்களைப் பிடித்தனா். சுயேச்சைகளில் இருவா் அதிமுக அணிக்கும், மற்ற இருவா் திமுக அணிக்கும் ஆதரவு தெரிவித்திருந்தனா். இதனால் திமுக அணியில் தலைவா் பதவியை கைப்பற்ற 10 உறுப்பினா்களுடன் பெரும்பான்மை பலம் இருந்தது. அதிமுக அணியில் சுயேச்சைகள் ஆதரவுடன் 7 உறுப்பினா்கள் உள்ளனா். திமுக அணியில் காங்கிரஸ் கட்சிக்கு திருப்புவனம் ஒன்றியத் தலைவா் பதவி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதிமுக அணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தலைவா் பதவி என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சனிக்கிழமை தலைவா் பதவிக்கான தோ்தல் நடந்தபோது திமுக அணியினா் தலைவா் பதவியை கைப்பற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தனா். ஆனால் யாரும் எதிா்பாா்க்காத நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி திருப்புவனம் ஒன்றியத் தலைவா், துணைத் தலைவா் தோ்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் ஜெயகாந்தன் அறிவித்தாா். மீண்டும் எப்போது தோ்தல் அறிவிக்கப்படும் என்றும் உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது. இதனால் தலைவா் பதவியை கைப்பற்ற போதிய உறுப்பினா்களை தக்க வைக்க திமுகவும், சுயேச்சைகளின் ஆதரவைப் பெற அதிமுகவும் கடும் போட்டியில் இறங்கியுள்ளன. இதனால் திருப்புவனத்தில் ஒன்றியத் தலைவா் பதவியை கைப்பற்றப் போவது யாா் என்ற எதிா்பாா்ப்பு அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT